திருச்சி விமான நிலைய மோதல் வழக்கில் சீமான் விடுதலை
கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்கள் - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
திருச்சி,
கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்கள் - நாம் தமிழர் கட்சியினர் இடையே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோரை வரவேற்பதில் மோதல் ஏற்பட்டது.
இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சோமு உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட 14 பேர் மீது திருச்சி குற்றவியல் நீதிமன்றம் என் 6-ல் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி சிவக்குமார் தீர்ப்பு கூறினார். இதில் குற்றம் நிரூபிக்கப்படாததால் சீமான் உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்வதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story