இருக்கைகள் அமைத்து தரப்படுமா?

மன்னார்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் அமர இருக்கைகள் இல்லாததால் மக்கள் நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருக்கிறார்கள்.
மன்னார்குடி
மன்னார்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் அமர இருக்கைகள் இல்லாததால் மக்கள் நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருக்கிறார்கள்.
சாா்பதிவாளர் அலுவலகம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காந்தி சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. மன்னார்குடி வருவாய் வட்ட பகுதியை சேர்ந்த விளைநிலம், வீட்டு மனை ஆகியவற்றை வாங்கி பதிவு செய்வதற்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு தினமும் வந்து செல்கிறார்கள். சார் பதிவாளர் அலுவலகம் முன்பு அவர்கள் அமர போதிய அளவு இடவசதி இல்லை.
இருக்கைகள்
இதனால் பத்திரப்பதிவுக்கு வரும் மக்கள் போதிய இடவசதி இன்மையால் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு இருக்கைகள் அமைத்து தர வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.