மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில பொதுக்குழு கூட்டம்


மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில பொதுக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 28 Aug 2023 12:30 AM IST (Updated: 28 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

இலஞ்சியில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தென்காசி

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் தென்காசி அருகே உள்ள இலஞ்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முருகையா, முன்னாள் மாவட்ட தலைவர் செந்தூர்பாண்டியன், மாவட்ட நிர்வாகி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட தலைவர் சங்கர் வரவேற்றார். பொதுச்செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் பிரபுதாஸ், ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அடுத்த நிலை பதவி உயர்வு குறித்து தெளிவான வழிகாட்டுதல் வெளியிட வேண்டும். நலத்திட்டங்களை மேற்கொள்ள தனியாக கணினி இயக்குனர் ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிக்கும் நியமிக்க வேண்டும். முதுகலை ஆசிரியர் நிலையில் இருந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வு பணியிடங்கள் அனைத்தும் காண்பிக்கப்பட்டு ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு நடத்தியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் காலை மதியம் உணவு வழங்கும் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும் உதவி பெறும் பள்ளிக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட செயலாளர் முருகையா நன்றி கூறினார்.

1 More update

Next Story