சென்னையில் 5 பேர் மூழ்கி பலியான குளத்தில் ரகசிய பூஜை... உச்சக்கட்ட பீதியில் மக்கள்..!


சென்னையில் 5 பேர் மூழ்கி பலியான குளத்தில் ரகசிய பூஜை... உச்சக்கட்ட பீதியில் மக்கள்..!
x

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் 5 பேர் பலியான மூவரசம்பட்டு குளத்தில் தடுப்பு அமைத்து பூட்டு போடப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த 5ம் தேதி மூவரசம்பட்டு குளத்தில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். இந்த சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த குளம் மிகவும் ஆழமானது என்பதால் பொதுமக்கள் யாரும் இங்கு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், குளக்கரையை சுற்றி அமைக்கப்பட்ட நடைபாதை பூட்டப்பட்டதால் நடை பயிற்சிக்காக வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், 5 பேர் உயிரிழந்த குளம் என்பதால், அப்பகுதி மக்கள் சிலர் அச்சத்தில் ரகசியமாக எலுமிச்சை, குங்குமம், வெற்றிலை போன்ற பொருட்களை வைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்துள்ளனர். குளத்தின் அருகே இந்த பொருட்களை காணும் மக்கள் பயத்தில் உள்ளனர். குளத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து முடித்த பின்னர் குளத்தின் பிரதான கேட் திறக்கப்படும் என கூறப்படுகிறது.





Related Tags :
Next Story