சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சில் அமைப்பில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சில் அமைப்பில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் இயங்கவுள்ள சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சில் அமைப்பிற்கு சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சில் கிளர்க்கு, தட்டச்சர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட உள்ளனர். விருப்பம் உடையவர்கள் http:/districts, ecourts.gov.in/sivagangai என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற 16-ந் தேதி மாலை 5 மணிக்குள் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மாவட்ட சட்ட பணி ஆணை குழுவிற்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அல்லது dlsasivagangai@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.