பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுப்பு: தமிழக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை இன்றும் நடக்கிறது


பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுப்பு: தமிழக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை இன்றும் நடக்கிறது
x

பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க சென்னை உள்பட தமிழக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.

சென்னை:

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் கடல் வழியாக ஊடுருவி வந்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதலை நடத்தினார்கள். அதன் பிறகு இந்தியாவின் கடல் எல்லைகளை தீவிர பாதுகாப்பு வளையத்தில் வைக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது.

அதன்படி தமிழகம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் 6 மாதங்களுக்கு ஒருமுறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த பாதுகாப்பு ஒத்திகை நடக்கவில்லை.

தற்போது இந்த ஒத்திகையை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இந்த பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி வரை இது நீடிக்கும். சென்னை உள்பட தமிழக கடலோர மாவட்டங்களில் இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது.

பயங்கரவாதிகள் வேடமிட்டு கடலோர பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த வீரர்கள் கடல் வழியாக வந்து நகர்ப்புற பகுதிக்குள் ஊடுருவுவார்கள். போலீசார் தீவிரமாக கண்காணித்து அவர்களை மடக்கிப் பிடிக்க வேண்டும். இதுதான் பாதுகாப்பு ஒத்திகையின் சிறப்பம்சம்.

அதன்படி நேற்று சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் வேடத்தில் வந்த 6 பேரை போலீசார் மடக்கி பிடித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்களில் 4 பேரை கடல் வழியாக படகில் வந்தபோது மடக்கியதாகவும், 2 பேர் கடல் வழியாக வந்து ஆட்டோவில் சுற்றியபோது பிடிபட்டதாகவும் போலீசார் கூறினார்கள்.


Next Story