மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காவலாளி சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காவலாளி சாவு
x

திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காவலாளி இறந்தார்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் சோழவந்தான் சாலை குளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வீரணன் (வயது 58). இவர் கப்பலூர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தன்னுடைய உறவினர் சிங்கம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்தார். அப்போது மறவன்குளம் பகுதியில் உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் அமர்ந்திருந்த வீரணன் தவறி தலைக்குப்புற விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Related Tags :
Next Story