காவலாளி தற்கொலை


காவலாளி தற்கொலை
x
தினத்தந்தி 13 Aug 2023 4:00 AM IST (Updated: 13 Aug 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

பெரியநாயக்கன்பாளையம் அருகே வடமாநில காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோயம்புத்தூர்


பெ.நா.பாளையம்


பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ்குமார் ராம் (வயது 25). இவர் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கியிருந்து காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பங்கஜ்குமார் தனது சொந்த ஊரில் ஒருபெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.

ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் அவரை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பங்கஜ்குமார் ராம், தான் தங்கியிருந்த தோட்ட வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story