நாகாத்தம்மன் கோவிலில் செடல் திருவிழா
விருத்தாசலம் நாகாத்தம்மன் கோவிலில் நடைபெற்ற செடல் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர்
விருத்தாசலம்,
விருத்தாசலம் செல்வராஜ் நகர், நாகாத்தம்மன் கோவில் செடல் திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், இரவு வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து செடல் திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து மணிமுக்தாற்றில் இருந்து பால்குடம், தீச்சட்டி, செடல் அணிந்த பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். பக்தர்கள் கொண்டு சென்ற பால்குடங்களால் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story