பொன்னேரி சாலையில் நாற்று நடும் போராட்டம்


பொன்னேரி சாலையில் நாற்று நடும் போராட்டம்
x

ஏலகிரி மலைக்கு செல்லும் பொன்னேரி சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதை கண்டித்து சாலையில் நாற்று நடும்போராட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஏலகிரி மலைக்கு செல்லும் பொன்னேரி சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதை கண்டித்து சாலையில் நாற்று நடும்போராட்டம் நடந்தது.

சாலையில் தேங்கிய மழைநீர்

ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஏலகிரிக்கு செல்லும் பொன்னேரி சாலையில் மழைநீர் தேங்கி நின்றது.

இதனால் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிக அவதிக்குள்ளாகினர். மேலும் ஒரு சில வாகனங்கள் மழைநீரில் திடீரென பழுதாகி நின்றது. இதனால் குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் சிரமத்துக்குள்ளானார்கள். கடந்த 7 ஆண்டுகளாக இதே நிலை ஏற்படுவதாகவும், இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என கூறப்படுகிறது.

நாற்று நடும் போராட்டம்

இந்த நிலையில் கன மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் வி.கே.செல்வம், மாவட்டத் தலைவர் அன்புஜி ஆகியோர் தலைமையில் நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் சாலையில் மழைநீர் தேங்கிய பகுதியில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சாலையோரத்தில் கால்வாய் வசதி ஏற்படுத்தி மழைநீர் நிற்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story