மாடசாமிபுரத்தில் மாற்றத்தைத்தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாடசாமிபுரத்தில் மாற்றத்தைத்தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாடசாமிபுரம் கிராமத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் மாற்றத்தை தேடி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில், இளைஞர்கள் போதை பொருட்களை பயன்படுத்தகூடாது, அந்த பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கி கூறினர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து நல்வழியில் வாழ அறிவுறுத்தினர். மேலும், சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் தெரிந்தாலோ, போதைப்பொருட்கள் கடத்துவது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வலியுறுத்தப்பட்டது. சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சாதி, மத பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கிராமத்தில் சாதிய அடையாளங்கள் இருந்தால் அவற்றை உடனடியா அழிக்கவும் போலீசார் அறிவுறுத்தினர். பின்னர் பொதுமக்கள் சட்டத்தை பின்பற்றி நடக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர்.