தொழில்வரி பிடித்தம் செய்வதை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி வால்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம்-அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது


தொழில்வரி பிடித்தம் செய்வதை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி  வால்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம்-அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
x

தொழில்வரி பிடித்தம் செய்வதை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி வால்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம் அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை பகுதி தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த தினக்கூலிக்கு அரசாணை வெளியிடவும், தொழில்வரி பிடித்தம் செய்வதை நிரந்தரமாக ரத்து செய்யவும், இடைக்கால ஒப்பந்தம் என்ற பெயரில் தினக்கூலியை குறைத்து தொழிலாளிக்கு துரோகம் செய்த தொழிற்சங்கங்களை கண்டித்தும் அ.தி.மு.க. நகர கழகம் சார்பில் பல்வேறு தொழிற்சங்கங்களுடன் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காந்திசிலை பஸ்நிறுத்தம் பகுதியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்களை நகர கழக செயலாளா் மயில்கணேசன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் வால்பாறை எம்.எல்.ஏ. அமுல்கந்தசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வால்பாறை பகுதி தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த தினக்கூலி ரூ.425.40-க்கு தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்த பிரச்சனையை உடனடியாக தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக நடவடிக்கை எடுக்க உங்கள் சம்மதத்துடன் மேற்கொள்ளவேண்டியுள்ளதால் உங்களுக்கு இப்போது கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் கையெழுத்து போட்டுத் தாருங்கள். நான் தொழில்வரியை நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளேன். மேலும் டேன்டீ தேயிலைத் தோட்டங்களை மூடுவதற்கு எதிர்ப்பு தொிவித்து அவர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடையை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்யாணி(எம்எல்எப்), பிரபாகரன் (ஐஎன்டியுசி), பரமசிவம் (சிஐடியு), மாணிக்கம்(எச்எம்எஸ்), சாமிதாஸ்(பிஎம்எஸ்), அன்பழகன்(கேஎம்டிகே), அ.தி.மு.க நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story