கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க கோரி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க கோரி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க கோரி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று காலையில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் தலைமை தாங்கினார்.

கோவில்பட்டியில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் மன்றங்கள், விரைவு நீதிமன்றம் ஆகியவை செயல்படுகின்றன. இங்கு சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி. வக்கீலாக பணியாற்றிய வரலாற்று சிறப்பும் உண்டு. இந்த நீதிமன்றங்கள் பழமையான கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. தற்போது 300 வக்கீல்கள் தொழில் ெசய்து வரும் நிலையில், நீதிமன்றத்தில் சிலருக்கு மட்டுமே அமரும் நிலையும், வழக்காடிகள் நீதிமன்றத்துக்கு வெளியில் காத்திருக்கும் நிலையும் தொடர்கிறது. எனவே, கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இதில் கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், நாம் தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர் ரவிக்குமார், தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மேரிஷீலா, விடுதலை சிறுத்தைகள் கட்சி கதிரேசன், பகத்சிங் ரத்ததான கழக தலைவர் காளிதாஸ், மக்கள் நீதி மையம் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜ் பேரவை மாவட்ட செயலாளர் நாஞ்சில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story