புதுக்குளத்தை ஆக்கிரமித்துள்ள சீமைகருவேல மரங்கள்


புதுக்குளத்தை ஆக்கிரமித்துள்ள சீமைகருவேல மரங்கள்
x

தோகைமலை அருகே புதுக்குளத்தை ஆக்கிரமித்துள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

புதுக்குளம்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே வடசேரி பெரிய ஏரிக்கு கிழக்கு பகுதியில் அரசுக்கு சொந்தமான 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுக்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு வடசேரி, பூவாயிபட்டி, தென்னகர், பூசாரிக்களம், வெள்ளையப்பன் பண்ணைக்களம் ஆகிய பகுதியில் மழை பெய்தால் வாரி மூலம் தண்ணீர் வரும்.மேலும், வடசேரி பெரிய ஏரியின் மூலம் பாசன வாய்க்கால் இருந்து வெளியேறும் உபரி நீரும் புதுக்குளத்திற்கு வரும். இந்த குளத்தில் மதகு மூலம் தண்ணீர் திறக்கப்பட்டால் சுமார் 20 ஏக்கர் விவசாய நிலம் நேரடியாக பாசன வசதி பெறும். மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு குடிநீர் ஆதரமாக இந்த குளம் உள்ளது.

கோரிக்கை

இந்தநிலையில் குளத்திற்கு வரும் வாரியையும், குளத்தில் உள்ள மதகு பகுதியையும் சீரமைக்காமலும் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் குளத்தில் சீமைகருவேல மரங்கள் அதிகளவில் முளைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதனால் குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது.மேலும் வரத்து வாரியை சிலர் ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர். எனவே இந்தாண்டும் பருவமழை பெய்து வருவதால், குளத்தில் முளைத்துள்ள சீமைகருவேல மரங்களை வெட்டி குளத்தை தூர்வாரி, வரத்து வாரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story