சீமான் இன்று காரைக்குடி வருகை
சீமான் இன்று காரைக்குடி வருகிறார்.
சிவகங்கை
காரைக்குடி,
காரைக்குடி அம்பேத்கர் சிலை அருகே அருணா நகரில் நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் சாயல் ராம் மகள் டாக்டர் சாரா ராமு புதிதாக கட்டியுள்ள சிலம்பாயி ஹோமியோபதி மருத்துவமனை திறப்பு விழா இன்று(திங்கட்கிழமை) மாலை 3.30 மணி அளவில் நடைபெறுகிறது. நாம் தமிழர் கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையை திறந்து வைக்கிறார். திறப்பு விழாவில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றிக்குமரன், ஹுமாயூன் கபீர், கோட்டை குமார், மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் அமுதா, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் என்ஜினீயர் பிரபாகரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் புகழேந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
Related Tags :
Next Story