லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
திருப்பூர்
அவினாசி
அவினாசியை அடுத்து உப்பிலிபாளையத்திற்கு டிப்பர் லாரியில் கோவை இடிகரை பகுதியில பகுதியில் இருந்து காஸ்டிங் மண் கொண்டுவந்து உப்பிலிபாளையம் தனியார் தோட்டத்துகிணற்றுக்குள் கொட்ட வந்துள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் லாரியை சிறை பிடித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் "ஏற்கனவே இதுபோல் காஸ்டிங் மண்ணை கொட்ட வந்த போது இனிமேல் இங்கு மண்னை கொட்டக் கூடாது என எச்சரித்து அனுப்பினோம். ஆனால் மீண்டும் மண்னை இங்கு கொட்ட வந்ததால் லாரியை சிறை பிடித்துள்ளோம்" என்றனர்.தகவல் அறிந்து கிராம நிர்வாக அலுவலர் சிவசாமி மற்றும் அவினாசிபோலீசார் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி லாரியை மீட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்
---------------
Related Tags :
Next Story