செய்குதம்பி பாவலர் பிறந்த நாள் விழா உருவ படத்துக்கு மாலை அணிவித்து கலெக்டர் மரியாதை


செய்குதம்பி பாவலர் பிறந்த நாள் விழா  உருவ படத்துக்கு மாலை அணிவித்து கலெக்டர் மரியாதை
x

149-வது பிறந்தநாளையொட்டி, சதாவதானி செய்குதம்பி பாவலரின் உருப்படத்துக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

149-வது பிறந்தநாளையொட்டி, சதாவதானி செய்குதம்பி பாவலரின் உருப்படத்துக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சதாவதானி செய்குதம்பி பாவலர்

சதாவதானி செய்குதம்பி பாவலரின் 149-வது பிறந்தநாள் நேற்று குமரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் இடலாக்குடியில் அமைந்துள்ள சதாவதானி செய்குதம்பி பாவலர் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது உருவப்படத்துக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சதாவதானி செய்குதம்பி பாவலரின் பிறந்தநாளையொட்டி, மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. மகளிர் மேல்நிலைப்பள்ளி 6-ம் வகுப்பு மாணவன் சபரீஷ், ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி ஜெஸ்மிகா ஆகியோர் முதல் பரிசை வென்றனர்.

பேச்சு- கட்டுரை போட்டிகள்

நாகர்கோவில் எஸ்.எல்.பி, மகளிர் மேல்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி கிருஷ்ணலட்சுமி, தோப்பூர் குமாரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி ஆக்னஸ் லிவிஷா ஆகியோர் 2-வது பரிசையும், ஏழகரம் அரசு உயர்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி பூர்ணிமா, இடலாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் ஹரிஷ் ஆகியோர் 3-வது பரிசையும் வென்றனர்.

கட்டுரைப்போட்டியில் நாகர்கோவில் புனித ஜோசப் வளனார் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஆர்த்திகா ஸ்ரீ, வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி அர்ஷிதா ஆகியோர் முதல் பரிசையும், எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் ரினேஷ் ரேவின், இடலாக்குடி சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி ஜெனிபர் ஆகியோர் 2-வது பரிசையும், மீனாட்சிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் சத்திய சபரிஷ், மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி பீமா யாஸ்மின் ஆகியோர் 3-வது பரிசையும் பெற்றனர்.

மாணவர்களுக்கு பரிசு

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், பாவலர் செய்குதம்பியின் மகன் வழி பேரன்கள் சித்திக், கவிஞர் ஜமால் முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story