மோட்டார் சைக்கிளில் கடத்திய 1 கிேலா கஞ்சா பறிமுதல்


மோட்டார் சைக்கிளில் கடத்திய 1 கிேலா கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே மோட்டார் சைக்கிளில் 1கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வாலிபரை போலீசர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே மோட்டார் சைக்கிளில் 1கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வாலிபரை போலீசர் கைது செய்தனர்.

தீவிர சோதனை

குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

வாலிபர் கைது

இந்தநிலையில் திருவட்டார் அருகே புலிப்பனம் கால்வாய் கரையோரம் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் மோட்டார்சைக்கிளில் மறைத்து வைத்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காட்டாத்துறை சடைவிளையை சேர்ந்த அஜித் (வயது27) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அஜித்தை கைது செய்தனர்.


Next Story