காரில் கடத்திய 1,566 வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்


காரில் கடத்திய 1,566 வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
x

திருச்சுழி அருகே காரில் கடத்திய 1,566 ெவளிமாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

திருச்சுழி அருகே காரில் கடத்திய 1,566 ெவளிமாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரோந்து பணி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் சில மாதங்களாக அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு புகார் வந்தன. இதையடுத்து திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் உத்தரவின் பேரில் திருச்சுழி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் காண்டீபன் தலைமையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து அனுமதியின்றி மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்தநிலையில் திருச்சுழியில் அனுமதியின்றி வெளிமாநில மதுபாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், இன்ஸ்பெக்டர் விஜய்காண்டீபன் ஆகியோரது தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சுழியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்த கருப்பசாமி (வயது 55) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சாத்தான்குளத்தை சேர்ந்த வீரன் என்பவர் மூலமாக திருமலைபுரத்தை சேர்ந்த மூவேந்தன்(33) என்பவர் விற்பனைக்காக வெளி மாநில மதுபாட்டில்களை வாங்கி காரில் ஏற்றி வருவது தெரியவந்தது.

1,566 மதுபாட்டில்கள் பறிமுதல்

இதையடுத்து எம்.ரெட்டியபட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் மூவேந்தன் வந்த காரில் 1,566 வெளி மாநில மதுபாட்டில்கள் இருந்தது. உடனடியாக மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் சாத்தான்குளத்தை சேர்ந்த வீரன், திருமலைபுரத்தை சேர்ந்த மூவேந்தன்(33), திருச்சுழியை சேர்ந்த கருப்பசாமி(55), அருப்புக்கோட்டையை சேர்ந்த முனியசாமி(31), மதுரையை சேர்ந்த சந்தானம்(32) ஆகிய 5 பேர் மீது எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் கருப்பசாமி, மூவேந்தன், முனியசாமி, சந்தானம் ஆகிய 4 பேரை எம்.ரெட்டியபட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த மதுபாட்டில்கள் எங்கு கடத்தி செல்லப்படுகிறது என போலீசார் தீவிர நடத்தி வருகின்றனர்.


Next Story