சேந்தமங்கலம் பகுதியில் 14 தராசுகள் பறிமுதல்
நாமக்கல்
நாமக்கல்:
நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையில் நாமக்கல் முத்திரை ஆய்வாளர் கோமதி மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் குழுவினர் நேற்று சேந்தமங்கலம் மற்றும் காளப்பநாயக்கன்பட்டி பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது எடை குறைவு, முத்திரை மற்றும் மறுமுத்திரையிடப்படாத எடை அளவுகள் பயன்படுத்துதல், தரப்படுத்தப்படாத எடையளவுகள், மறுபரிசீலனை சான்று காட்டி வைக்கப்படாமை, சோதனை எடை கற்கள் வைத்திருக்காதது தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக 13 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில், முத்திரை மற்றும் மறுமுத்திரையிடாமல் பயன்படுத்திய 11 மின்னணு தராசுகள் மற்றும் 3 மேஜை தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story