1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு,ஜூன்.17-
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், ஷார்ஜா, மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் திருச்சி விமான நிலையத்தில் சுமார் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சார்ஜாவில் இருந்து வந்த விமான பயணி ஒருவரிடம் ரூ.12 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான தங்கமும், துபாயில் இருந்து வந்த பயணியிடம் ரூ.28 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று 9 சிறிய கட்டிகளாக மறைத்து எடுத்து வந்த பயணிடம் இருந்து ரூ.23 லட்சத்து 7 ஆயிரமும் மதிப்பிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை சுமார் ஒரு கிலோ இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.