சங்கரன்கோவிலில் 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


சங்கரன்கோவிலில் 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

சங்கரன்கோவிலில் 1½ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் திருப்பூர் குமரன்நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 கார்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே தாலுகா போலீசார் அங்கு விரைந்து வந்து, சந்தேகப்படும்படியாக நின்ற 2 கார்களை சோதனையிட்டனர். அப்போது அதில் சுமார் 1½ டன் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக இருப்பது தெரியவந்தது.

உடனே இதுதொடர்பாக நெல்லை குடிமைப்பொருள் வழங்கல் புலனாய்வு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று சங்கரன்கோவில் வந்த குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள், 1½ டன் ரேஷன் அரிசியையும், 2 கார்களையும் பறிமுதல் செய்து நெல்லைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story