குழித்துறை நகராட்சியில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

குழித்துறை நகராட்சியில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

குழித்துறை நகராட்சியில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

குழித்துறை,

குழித்துறை நகராட்சியில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் உத்தரவுப்படி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் ஊழியர்கள் குழித்துறை, மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது 7 கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 100 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும் விதிமுறைகளை மீறும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.

Next Story