100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

அருப்புக்கோட்டையில் 100 கிலோ பிளாஸ்டிக்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் 100 கிலோ பிளாஸ்டிக்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்பேரில் அருப்புக்கோட்டையில் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உத்தரவின்படி நகர்நல அலுவலர் ராஜநந்தினி ஆலோசனை படி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் குழுக்களாக பிரிந்து எம்.எஸ்.கார்னர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.

பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல்

அப்போது மளிகைகடை, பலகாரக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் இருந்து 100 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலுமாக ஒழிக்கும் வரையில் ஆய்வு நடவடிக்கை தொடரும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து மஞ்சள் பையை அதிகம் பயன்படுத்த வேண்டும் எனவும் நகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டார்.


Next Story