இனயம்புத்தன்துறையில் 1,140 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்


இனயம்புத்தன்துறையில் 1,140 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
x

இனயம்புத்தன்துறையில் 1,140 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

குளச்சல்,

இனயம்புத்தன்துறையில் 1,140 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

செய்யப்பட்டது.

மண்எண்ணெய் பறிமுதல்

இனயம் புத்தன்துறையில் உள்ள ஒரு பழைய கடையில் மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கும் மண்எண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதுக்கி வைத்திருந்த 1,140 லிட்டர் மண்எண்ணெயை பறிமுதல் செய்தனர். இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்தி ெசல்ல பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணெய், கிள்ளியூர் வட்ட வழங்கல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 More update

Next Story