செம்மண் கடத்திய 2 டெம்போக்கள் பறிமுதல்


செம்மண் கடத்திய 2 டெம்போக்கள் பறிமுதல்
x

செம்மண் கடத்திய 2 டெம்போக்கள் பறிமுதல்

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை போலீஸ் உதவி சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தக்கலை அருகே உள்ள செம்பிலாவிளையில் செம்மண் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு போலீசாரை கண்டதும் டெம்போவில் செம்மண்ணை ஏற்றிக்கொண்டிருந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதனையடுத்து போலீசார் செம்மண் கடத்த பயன்படுத்திய 2 டெம்போக்களை பறிமுதல் செய்து தக்கலை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story