உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் பதுக்கிய 24 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது


உசிலம்பட்டி அருகே  தோட்டத்தில் பதுக்கிய 24 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது
x

உசிலம்பட்டி அருகே தோட்டத்து பகுதியில் பதுக்கிய 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே தோட்டத்து பகுதியில் பதுக்கிய 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

24 கிலோ கஞ்சா பறிமுதல்

உசிலம்பட்டி அருகே மாமரத்துப்பட்டி அருகில் தோட்டத்து பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்துக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் தனிப்பிரிவு போலீசார் மாமரத்துப்பட்டி பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் ஏராளமான கஞ்சா அங்கு பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 24 கிேலா கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

4 பேர் கைது

இந்த கஞ்சா பதுக்கல் தொடர்பாக மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 29), மேலமடையைச் சேர்ந்த சரவணன் (30), கருகட்டான்பட்டியைச் சேர்ந்த நாகேந்திரன் (28), அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்த பிரசாத் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

கைதான இவர்களை உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். உசிலம்பட்டி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் இந்த கஞ்சா பதுக்கல் தொடர்பாக 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கஞ்சா கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story