30 கிலோ ரசாயனம் தடவிய பச்சை பட்டாணி பறிமுதல்


30 கிலோ ரசாயனம் தடவிய பச்சை பட்டாணி பறிமுதல்
x

30 கிலோ ரசாயனம் தடவிய பச்சை பட்டாணி பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி:

பொன்னமராவதி பஸ் நிலையம் அருகே உள்ள சந்தை வீதியில் ரசாயனம் கலந்த பச்சை பட்டாணி விற்பனை செய்வதாக ெதரிந்ததையடுத்து பொன்னமராவதி பேரூராட்சி துறை அலுவலர்கள், அங்கு சென்றனர். அப்போது அங்கு ரசாயனம் தடவிய பச்சை பட்டாணி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 30 கிலோ பச்சை பட்டாணி பறிமுதல் செய்தனர். மேலும் அதனை விற்பனை செய்த வியாபாரி தப்பியோடி விட்டார். இதையடுத்து பறிமுதல் செய்த பட்டாணியை பேரூராட்சித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அதே பகுதியில் குழிதோண்டி புதைத்தனர். மேலும் சந்தை பகுதியில் உள்ள பொதுமக்கள் ரசாயனம் தடவிய எந்த பொருளையும் வாங்க வேண்டாம் என அறிவுரை கூறி அவ்வாறு விற்பனை செய்தால் உடனடியாக பேரூராட்சி, சுகாதாரத்துறை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறி உள்ளனர்.

1 More update

Next Story