மணல் கடத்தல் 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்தல்  5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x

மயிலம் அருகே மணல் கடத்தல் 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

விழுப்புரம்

மயிலம்

மயிலம் அருகே உள்ள பாதிராப்புலியூர் கிராமத்தில் நேற்று அதிகாலை மயிலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுஇருந்தனர். அப்போது பாதிராப்புலியூர் அம்மச்சார் அம்மன் கோவில் எதிரே மணலுடன் வந்து கொண்டிருந்த 5 மாட்டு வண்டிகளை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக பாதிராப்புலியூர் மேட்டு தெருவைச் சேர்ந்த தங்கவேலு மகன் வெங்கடேசன்(வயது 50), நடராஜன் மகன் செந்தில்(35), நாகப்பன் மகன் ஏகாம்பரம்(57), நடராஜன் மகன் வெங்கடாஜலபதி(42) அர்ஜுனன் மகன் சகாதேவன்(60) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story