55½ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


55½ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் 55½ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர்

திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.சந்தோஷ்குமார் உத்தரவின் பேரில், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மேற்பார்வையில், திருச்சி சரகத்திற்குட்பட்ட அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பெரோஸ்கான் அப்துல்லா (அரியலூர்), மணி (பெரம்பலூர்) ஆகியோர் தலைமையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசாரால் சிறப்பு அதிரடி வேட்டை கடந்த 16-ந்தேதியும், நேற்று முன்தினமும் நடத்தப்பட்டது. இதில் அரியலூர் மாவட்டத்தில் 25 வழக்குகள் பதிவு செய்து, 45 கிலோ 754 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 56 வழக்குகள் பதிவு செய்து 9 கிலோ 919 கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாவட்டங்களில் சட்டவிரோதமாக புகையிலை வியாபாரம் செய்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.


Next Story