பள்ளி, கல்லூரி வாகனங்களில் 'ஏர்ஹாரன்' பறிமுதல்


பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஏர்ஹாரன் பறிமுதல்
x
தினத்தந்தி 15 March 2023 12:30 AM IST (Updated: 15 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஏர்ஹாரன்களை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பறிமுதல் செய்தார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் பகுதியில் இயக்கப்படுகிற பள்ளி, கல்லூரி வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய 'ஏர்ஹாரன்' பொருத்தப்பட்டிருப்பதாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சண்முக ஆனந்துக்கு புகார் வந்தது. இதன் எதிரொலியாக, அவரது தலைமையில் வேடசந்தூர் அரசு மருத்துவமனை முன்பு நேற்று காலை பள்ளி, கல்லூரி வாகனங்களில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. அந்த வழியாக வந்த 20 வாகனங்களை சோதனை செய்ததில், 12 வாகனங்களில் 'ஏர்ஹாரன்'கள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த 'ஏர்ஹாரன்'களை, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சண்முக ஆனந்த் பறிமுதல் செய்தார். மேலும் அந்த வாகனங்களுக்கு அவர் அபராதம் விதித்தார். இதுபற்றிய தகவல் வேடசந்தூர் பகுதியில் காட்டுத்தீயாய் பரவியது. இதனை அறிந்த டிரைவர்கள், தங்களது வாகனங்களை இடையிலேயே நிறுத்தி அதில் பொருத்தியிருந்த 'ஏர்ஹாரன்'களை தாங்களாகவே கழற்றி வைத்து விட்டு வாகனங்களை இயக்கினர். இனிவருங்காலத்தில் 'ஏர்ஹாரன்'களை பொருத்தி வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Related Tags :
Next Story