கேக் கடலை மாவு பறிமுதல்


கேக் கடலை மாவு பறிமுதல்
x

உளுந்தூர்பேட்டை பேக்கரி கடையில் கேக் கடலை மாவு பறிமுதல்

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தனியார் உணவகங்களில் பயன்படுத்த முடியாத கெட்டுப்போன 15 கிலோ சிக்கன்கறி, பேக்கரிகடைகளில் பாதுகாப்பாற்ற முறையில் தயார் செய்யப்பட்ட 20 கிலோ கேக், காலாவதியான 25 கிலோ கடலை மாவு ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள் கதிரவன், அன்பு மற்றும் பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story