சேலம் வழியாக சென்ற ரெயிலில் கடத்திய 7 கிலோ கஞ்சா பறிமுதல்


சேலம் வழியாக சென்ற   ரெயிலில் கடத்திய 7 கிலோ கஞ்சா பறிமுதல்
x

சேலம் வழியாக சென்ற ரெயிலில் கடத்திய 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்

சூரமங்கலம்

சேலம் வழியாக செல்லும் ெரயில்களில் கஞ்சா கடத்துவதை தடுப்பதற்கு ெரயில்வே போலீசார் மற்றும் ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தனிப்படை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று சேலம் வந்த கொல்லம்- விசாகப்பட்டினம் வாராந்திர ரெயிலில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது டி-1 பெட்டியில் கேட்பாரற்று பெரிய பேக் ஒன்று கிடந்தது. இதனையடுத்து அந்த பேக்கை திறந்து பார்த்தபோது 7 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. பின்னர் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் ரெயிலில் கஞ்சாவை கடத்தியவர்கள் குறித்து பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story