மாட்டுவண்டிகள் பறிமுதல்


மாட்டுவண்டிகள் பறிமுதல்
x

மணல் கடத்தல் மாட்டுவண்டிகள் பறிமுதல்

கடலூர்

விருத்தாசலம்

விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, ராமச்சந்திரன்பேட்டை பகுதியில் உள்ள மணிமுக்தாற்றில் சிலர் மாட்டுவண்டியில் மணல் அள்ளிக்கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடிப்பதற்காக அருகில் சென்றனர். ஆனால் போலீசார் வருவதை கண்ட மர்ம நபர்கள் மாட்டுவண்டிகளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். பின்னர் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய மாட்டுவண்டி உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.


Next Story