மளிகை கடையில் குட்கா பொருட்கள் பறிமுதல்
மளிகை கடையில் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி
திருச்சி தென்னூர் சின்னசாமிநகர் பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தில்லைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தில்லைநகர் போலீசார் நேற்று முன்தினம் அந்த கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கடையில் ரூ.6 ஆயிரத்து 868 மதிப்புள்ள 1,398 பாக்கெட் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடையின் உரிமையாளர் தென்னூர் சின்னசாமிநகரை சேர்ந்த அப்துல்லாவை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story