உயர் ரக போதைப்பொருள் பறிமுதல்
உயர் ரக போதைப்பொருள் பறிமுதல்
பெ.நா.பாளையம்
பெரியநாய்க்கன் பாளையம் பகுதியில் உயர் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணை
பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ் கண்ணா மற்றும் போலீசார் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள கோவிந்தநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து அந்த வாலிபரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
5 கிலோ கஞ்சா பறிமுதல்
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் உயர் ரக போதைப்பொருளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர் கொண்டையம்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.