கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்
கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி மாரியம்மன் கோவில் அருகே சிலர் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி விற்பனை செய்வதாக புவியியல் மற்றும் சுங்கத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து உதவி புவியியலாளர் சங்கர் தலைமையிலான அலுவலர்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தபோது அதில் 3 யூனிட் கிராவல் மண் இருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், லாரியில் கிராவல் மண் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த உதவி புவியியலாளர் சங்கர், அதனை ஆலங்குடி போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரான ஆலங்காட்டை சேர்ந்த சாமி என்ற கந்தசாமியை வலைவீசி தேடி வருகிறார்.