எம்.சாண்ட் கடத்திய டெம்போ பறிமுதல்


எம்.சாண்ட் கடத்திய டெம்போ பறிமுதல்
x

எம்.சாண்ட் கடத்திய டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

எம்.சாண்ட் கடத்திய டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது.

புவியியல் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் ஸ்ரீகுமார், குளச்சல் கிராம நிர்வாக வருவாய் ஆய்வாளர் முத்துப்பாண்டி ஆகியோர் மணவாளக்குறிச்சி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மணவாளக்குறிச்சி பிள்ளையார்கோவில் சந்திப்பில் சந்தேகப்படும் வந்த டெம்போவை தடுத்து நிறுத்தினர். அதிகாரிகளை கண்டதும் டிரைவர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். டெம்போவை சோதனை செய்தபோது, அதில் அனுமதியின்றி எம்.சாண்ட் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டெம்போவை பறிமுதல் செய்து மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தேடி வருகிறார்கள்.


Next Story