குத்தகை பாக்கி செலுத்தாத வீட்டில் இருந்த பொருட்கள் ஜப்தி


குத்தகை பாக்கி செலுத்தாத வீட்டில் இருந்த பொருட்கள் ஜப்தி
x

குத்தகை பாக்கி செலுத்தாத வீட்டில் இருந்த பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டது.

தென்காசி

அச்சன்புதூர்:

சிவகிரி அருகே சுப்பிரமணியபுரம் சுந்தர விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் 53 சென்ட் நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்த நபரின் மறைவுக்கு பின்னர் அவரது வாரிசுதாரர்கள் அந்த நிலத்தில் வீடு கட்டி வசித்தும், விவசாயம் செய்தும் வந்தனர். அவர்கள் நீண்டகாலம் குத்தகை பணம் செலுத்தாததால், கோவிலுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 15 இருந்தது.

இதுதொடர்பாக வாரிசுதாரர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது. எனினும் கோவில் நிலத்தில் வசித்தவர்கள் குத்தகை நிலுவைத்தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அந்த நிலத்தில் உள்ள வீட்டில் இருந்த பீரோ, பித்தளை பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்தனர்.



Next Story