அதிக பாரம் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
அதிக பாரம் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர்
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மீனாட்சி, ரவிச்சந்திரன் ஆகியோர் அரவக்குறிச்சி அருகே உள்ள தடாக்கோவில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிக பாரம் ஏற்றி சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மதுரை மேலூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சென்று கொண்டிருந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் 106.650 டன் கிரானைட் கற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகபாரம் ஏற்றி வந்ததாக அந்த லாரிக்கு ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story