அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்


அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் பகுதியில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் பகுதியில் அரசின் அனுமதி பெற்று கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்த குவாரிகளில் இருந்து விதிகளை மீறி டாரஸ் லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்வதுடன் தார்பாய் மூடப்படாமல் திறந்த வெளியில் கருங்கற்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதனால் கிராம சாலைகள் சேதமடைவதுடன், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா கிராம நிர்வாக அலுவலர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறை மீறி அதிக பாரம் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரியை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் லாரி, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாரஸ் லாரிகளில் குறிப்பிட்ட அளவே பாரம் ஏற்றிச் செல்லவேண்டும். தொடர்ந்து இதுபோன்று விதிமீறலில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட கல்குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என தாசில்தார் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story