பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் பறிமுதல்


பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு உத்தரவின்படி, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் வழிகாட்டுதல்படியும், விராலிமலை ஒன்றியம், இராசநாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மளிகை கடை, பெட்டிக்கடை, பேக்கரி, காய்கறி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் மாரிக்கண்ணு, கார்த்தி, பாலமுருகன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது பேக்கரி மற்றும் மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததும், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் அவற்றை அப்பகுதியில் கொட்டி எரியூட்டி அழித்தனர்.


Next Story