பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், திருப்பத்தூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வெ.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் இணைந்து திருப்பத்தூர் பஸ் நிலையம் மற்றும் நகராட்சி வணிக வளாகங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப் படுகிறதா என சோதனை நடத்தினர்.
அப்போது பிளாஸ்டிக் கப்புகள், கேரிபேக், பிளாஸ்டிக் தட்டுகள் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் சுமார் 500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story