விபத்துக்குள்ளான காரில் ரூ.1½ லட்சம் பான்மசாலா பொருட்கள் பறிமுதல்


விபத்துக்குள்ளான காரில் ரூ.1½ லட்சம் பான்மசாலா பொருட்கள் பறிமுதல்
x

விபத்துக்குள்ளான காரில் ரூ.1½ லட்சம் பான்மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தனகிரி மேம்பாலத்தில் முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. காரை விட்டுவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். டிப்பர் லாரி டிரைவர் வேலூர் மாவட்டம் இடையன்சாத்து கூட்ரோடு பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 49) என்பவர் ரத்தனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் காரை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்து சோதனை செய்தனர்.

அப்போது தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் முட்டை மூட்டையாக காரில் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் என கூறப்படுகிறது.

தப்பிச் சென்ற கார் டிரைவர் மற்றும் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story