கடத்த முயன்ற ரூ.10¼ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்


கடத்த முயன்ற ரூ.10¼ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
x

கடத்த முயன்ற ரூ.10¼ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

கடத்தல்

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் வரும் பயணிகளில் சிலர் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகள் வெளிநாட்டு பணத்தை கடத்திச்செல்ல முயலும் நிலையில், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

பறிமுதல்

இந்த நிலையில் நேற்று திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர், தனது கைப்பையில் மறைத்து ரூ.10 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story