மணல் கடத்தல் மினி லாரி பறிமுதல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே மணல் கடத்தல் மினி லாரி பறிமுதல்
கள்ளக்குறிச்சி
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் மலட்டாறு பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது மினி லாரியில் மணலை ஏற்றி வந்து கொண்டிருந்த மர்மநபர்கள் போலீசாரை கண்டதும் மினி லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் அந்த மினி லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story