மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது
மதுரை
பேரையூர்,
மதுரை மாவட்டம் சாப்டூர் பாளையம் ஓடையில் அனுமதி இன்றி மணல் அள்ளப்படுவதாக சாப்டூர் கிராம நிர்வாக அலுவலர் சதீசுக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சாப்டூர் போலீசார் சென்றனர். அங்கு அனுமதி இல்லாமல் டிராக்டர் ஒன்றில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தவர் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓடி விட்டார். போலீசார் அங்கிருந்த டிராக்டரை பறிமுதல் செய்து சாப்டூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்து மெய்யனூத்தம்பட்டியை சேர்ந்த அர்ஜுன் (வயது 22), கணபதி ஆகியோர் மீது சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story