மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்


மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்
x

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் சாமி மற்றும் போலீசார் சொக்கநாதன் புத்தூர் தெற்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தினர். போலீசாரை கண்டதும் டிராக்டரை நிறுத்தி விட்டு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் டிராக்டரை சோதனை செய்து பார்த்த போது அதில் அனுமதியின்றி மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story