புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
ஆயர்பாடியில் புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை
காவேரிப்பாக்கத்தை அடுத்த ஓச்சேரி, ஆயர்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என சோதனை செய்தனர். அப்போது ஆயர்பாடியில் உள்ள பெட்டிக் கடையில் சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆயர்பாடியை சேர்ந்த பரசுராமன் (55) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story