புகையிலை பொருட்கள் பறிமுதல்
சேத்துப்பட்டில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனர்.
திருவண்ணாமலை
போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சேத்துப்பட்டு-செஞ்சி சாலை கார்னர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள கடையில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதனையடுத்து கடையில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடை உரிமையாளர் விஜயராம் பட்டேலை கைது செய்தனர்.
Related Tags :
Next Story